Categories
மாநில செய்திகள்

#BREAKING: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு…. ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு….!!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக போட்டித்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிறகு குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி டிஎன்பிஎஸ்சி இந்த தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

மேலும் சுமார் 5,831 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு மற்றும் அதன் கூடுதல் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் இந்த குரூப்-2 தேர்வை எழுதலாம். தேர்வருடைய வயது வரம்பு 30-க்கும் மிகாமல் இருக்க வேண்டும். அதாவது இந்த வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும். வயது வரம்பில் மற்ற பிரிவினருக்கு சலுகைகள் உண்டு.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் OTR கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. OTR கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் குரூப் 2 & 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் சிரமம் அடைந்ததால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை இணைத்த உடன் இனிவரும் காலங்களில் OTR கணக்கு மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |