மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக 14 விதமான வளர்ச்சி திட்ட பணிகளை அரசு செயல்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு சாலை வசதி அமைத்து தருமாறு பல வருடங்களாக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அவர்களது கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 14 அம்ச பணிகளை ரூபாய் 4 கோடி செலவில் அரசு செய்துள்ளது. இதன்படி 8 இடங்களில் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதாவது பெஜிலி பாளையம்-திக்கையூர் 4,38,000 ரூபாய், கோவில் நத்தம்- அக்னிபாவி கொங்காடை 32,85,000 ரூபாய், கெப்பக்காடு-பெஜிலட்டி 36,65,000 ரூபாய், பாலபந்தனூர்-பெஜலட்டி 25,53,000 ரூபாய், கத்திரிபட்டி வன எல்லை-ஈசலாங்காடு 48,14,000 ரூபாய், பர்கூர் கத்திரிபட்டி வன எல்லை- ஈசலாங்காடு 49,39,000 ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து 68,41,000 ரூபாய் செலவில் இரண்டு சிறு பாலங்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளித்திருப்பூர் ஊராட்சியிலிருந்து மலை கிராமங்களை இணைப்பதற்காக 66,47,000 ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறும்பானூர் வன எல்லையில் ஓரடுக்கு கப்பி சாலை அமைக்கும் பணி 66,47,000 ரூபாய் மதிப்பீட்டிலும், ஊரக இணைப்பு சாலை அமைக்கும் பணி 21,00,000 ரூபாய் மதிப்பீட்டிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்பிறகு ஊத்துக்குளி பகுதியில் 21,00,000 ரூபாய் மதிப்பிலும், மைலம்பாடி பகுதியில் 49,81,000 ரூபாய் மதிப்பீட்டிலும், வெள்ளித்திருப்பூர்-கரட்டுவலசு பகுதியில் 49,81,000 ரூபாய் மதிப்பீட்டிலும், பர்கூர் ஒன்னக்குறை-முத்தூர் வனச் சாலை 41,31,000 ரூபாய் மதிப்பீட்டிலும் ஓரடுக்கு கம்பி சாலை மற்றும் ஊரக இணைப்புச் சாலை பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சித் திட்டங்கள் மூலம் பவானி, சென்னிமலை, அந்நியூர், அம்மாபேட்டை போன்ற பகுதிகளில் வசிக்கும் பயன் பெறுவார்கள் மேலும் ரூபாய் 4 கோடியை 94 லட்சம் இந்த வளர்ச்சி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.