பெங்களூருவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக இரண்டு ஸ்ட்ரோக் எஞ்சின்களை கொண்ட ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெங்களூருவில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 2 ஸ்ட்ரோக் எஞ்சின்களை கொண்ட ஆட்டோக்களை இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு 2 ஸ்ட்ரோக் எஞ்சின் ஆட்டோக்கள் இயக்கப்பட்டால் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. கர்நாடக அரசின் இந்த அறிவிப்பால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 2 ஸ்ட்ரோக் எஞ்சின் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே கர்நாடக அரசு இரண்டு ஸ்ட்ரோக் எஞ்சின் ஆட்டோக்களை 4 ஸ்ட்ரோக் எஞ்சின் ஆட்டோக்கள் ஆக மாற்ற 30 ஆயிரம் வரை மானியம் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Categories