நடிகை சமந்தா தோல்வி, இழப்பு, அவமானம், விவாகரத்து, மரணம் குறித்து பதிவிட்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. சமந்தாவும் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் பந்தத்தில் இணைந்தார்கள். கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்நிலையில் சமந்தா இழப்பு, அவமானம், விவாகரத்து, மரணம் பற்றி ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சொன்னதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார். பகிர்வில் சொன்னது என்னவென்றால் சென்ற 30 வருடங்களாக பிறரைப் போல் நானும் இழப்பு, தோல்வி, அவமானம், விவாகரத்து, மரணம் உள்ளிட்டவற்றை சந்தித்திருக்கிறேன்.
என்னுடைய பணம் பறி போயுள்ளது. எனது குடும்பம் சிதைந்திருக்கின்றது. ஆனால் ஒவ்வொரு முறையும் நான் மீண்டெழுந்து இருக்கின்றேன். வாழ்க்கையின் அடுத்த செங்கலை உருவாக்குகின்றேன். எது நடந்தாலும் சரி உங்கள் முன்னால் ஒரு செங்கல் இருக்கின்றது அதை வைத்து மீண்டும் ஒரு கட்டிடத்தை உருவாக்குங்கள். நீங்கள் அதை வைத்து எதையாவது உருவாக்குவீர்கள் என்பதே கேள்வியாக இருக்கின்றது என இதில் பதிவிடப்பட்டிருந்தது. வில் ஸ்மித்தின் புத்தகத்தை வெகுவாக பாராட்டி இருக்கிறார் சமந்தா. கடுமையாக உழைக்க வேண்டும். தோல்விகள் ஏற்பட்டால் மீண்டும் எழ வேண்டும். தோல்வியிலிருந்து புதிய அனுபவத்தை கற்றுக்கொள்ள வேண்டும். என்ன அற்புதமான புத்தகம் வில் என பதிவிட்டு இருக்கிறார் சமந்தா.