சட்ட விரோதமாக சாராயம் விற்ற குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர், பெரியாச்சி கோவில் அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் கலியபெருமாள் என்பதும், அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கலியபெருமாள் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.