தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு மாநில செயலாளர் முன்னிலை வகித்துள்ளார். மேலும் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த சில மாதங்களாக உதவி திட்ட அலுவலர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதன் முடிவில் மாவட்ட பொருளாளர் நன்றியுரையாற்றியுள்ளார். இதில் அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.