Categories
அரசியல்

“வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவு …!!” தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்த சித்தராமையா…!!

பிரதமர் மோடிக்கு கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளாக பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகிறது. அரசின் வருமானத்தை அதிகரிப்பதிலும் மத்திய அரசு தோல்வியை தழுவியுள்ளது.
இந்நிலையில் தற்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள அரசின் பணத்தை திரும்பப் பெறப் போவதாக அறிவித்துள்ளார். 1969ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி வங்கிகளை அரசுடமையாக்கினார்.

இதனால் பலதரப்பட்ட மக்களும் தனியார் வங்கிகளால் பாதிக்கப்படுவது பெருமளவில் தவிர்க்கப்பட்டது. வங்கிகள் தேசிய மயமாக்கப் பட்டதால் விவசாயிகள் மற்றும் சிறு குறு தொழிலாளர்களுக்கு கடனுதவி கிடைக்கப் பெற்றது. ஆனால் தற்போதைய மோடி அரசு தேசிய வங்கிகளில் எண்ணிக்கையை 27-ல் இருந்து 12 ஆக குறைத்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் உள்ள நான்கு வங்கிகள் தன்னுடைய அடையாளத்தை இழந்துள்ளன. விவசாயிகள் மற்றும் சிறு குறு தொழிலாளர்களுக்கு பங்கத்தை விளைவிக்கும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் இந்த நடவடிக்கையை உடனடியாக அரசு திரும்ப பெறவேண்டும்.!” இவ்வாறு அவர் கூறினார்.

Categories

Tech |