Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொழிலாளிக்கு சிகிச்சை அளிக்க தாமதம்…. கொழுந்து விட்டு எரிந்த தீ…. சேலத்தில் பரபரப்பு…!!

நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகிவிட்டது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி எம். பெருமாபாளையம் பகுதியில் தனியார் நூற்பாலை அமைந்துள்ளது. இந்த நூற்பாலையில் 200-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் செய்யும் எந்திரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இந்த தீ விபத்தில் சிக்கிய சுசில் குமார் என்பவரை தொழிலாளர்கள் மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று மணிநேர போராட்டத்திற்கு பிறகு நூற்பாலையில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கண்கள் எரிந்து நாசமாகிவிட்டது.

இதற்கிடையில் காயமடைந்த தொழிலாளிக்கு 3 மணி நேரமாக சிகிச்சை அளிக்காமல் நூற்பாலை நிர்வாகத்தினர் தனி அறையில் படுக்க வைத்து மெத்தனமாக இருந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுனில்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து தீக்காயமடைந்த நபருக்கு சிகிச்சை அளிக்காமல் இருந்த தனியார் நூற்பாலை நிர்வாகத்தினரை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |