டான் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமை மற்றும் ஓடிடி உரிமை யாரிடம் சென்றுள்ளது என தெரிய வந்திருக்கின்றது.
நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதை கவர்ந்தவர். தற்போது இவர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கின்றார். அனிருத் இசையமைத்திருக்கிறார். மேலும் இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா சமுத்திரக்கனி, சூரி, முனீஷ்காந்த், காளி வெங்கட், பாலா சரவணன், சிவாங்கி, புகழ் போன்றோர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பானது சென்னை, கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் எடுக்கப்படுகின்றது. அண்மையில் இப்படத்தின் பாடல் வெளியாகிய நிலையில் கிராமம் முதல் நகரம் வரை ரசிகர்கள் மனதை கவர்ந்து இருக்கின்றது. இத்திரைப்படம் மார்ச் மாதம் கடைசியாக ரிலீஸாக இருக்கின்றது. இந்நேரத்தில் இத்திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை மற்றும் ஓடிடி உரிமை தொடர்பாக செய்தி வெளியாகி இருக்கின்றது. சாட்டிலைட் உரிமையானது கலைஞர் தொலைக்காட்சியின் வசம் சென்றிருக்கின்றது. திரைப்படம் வெளியான பிறகு பிந்தைய ஓடிடி உரிமையே நெட்பிளிக்ஸ் நிறுவனமானது வாங்கியுள்ளது. இதற்காக இந்த ரெண்டு நிறுவனமும் மிகப் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.