கடமான் கறியை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக வாலிபரை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பட்டங்காடு பகுதியில் சங்கரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கடமான் கறி பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனத்துறையினர் சங்கர மணியின் வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு இருந்த கடமான் கறியை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து சங்கரமணியை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் பட்டங்காட்டை சேர்ந்த விவசாயியான துரைசிங் என்பவர் தோட்டத்தை சுற்றிமின்சார வேலி அமைத்துள்ளார். அந்த மின்சார வேலியில் சிக்கி இறந்த கடமானை மணி, முருகன், பொன்ராஜ் ஆகியோர் வீட்டிற்கு எடுத்துச் சென்று கூறு போட்டு பங்கு வைத்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொன்ராஜை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் முருகன் மற்றும் துரைசிங் ஆகியோரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.