Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

துணி துவைக்க சென்ற பெண்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முனைஞ்சிப்பட்டி கிராமத்தில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செண்பகம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்து வேலைக்கு சென்ற பிறகு செண்பகம் பக்கத்து வீட்டில் துணி துவைப்பதற்கு சென்றுள்ளார். அப்போது வீடு சரியாக பூட்ட படாமல் திறந்து கிடந்ததை பார்த்த மர்ம நபர் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகையை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த செண்பகம் தங்க நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து செண்பகம் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |