JNU பல்கலைக்கழக தாக்குதல் சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
நேற்று முன்தினம் டெல்லி JNU பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியினுள் நுழைந்த கும்பல் அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கடுமையாக தாக்கினார். கொடூர ஆயுதங்களோடு நுழைந்து மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பாஜகவின் மாணவர் அமைப்பான ABVP தான் காரணம் என்று ஒரு தரப்பினரும் , இடதுசாரி மாணவர் அமைப்புதான் காரணம் என்று ஒரு தரப்பினரும் மாறி மாறி குற்றம் சுமத்துகின்றன.
இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக டெல்லி போலீசார் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் கொடூரமாக தாக்குதலுக்கு ஆளான டெல்லி ஜே என் யூ பல்கலை. மாணவர்கள் சங்க தலைவி அய்ஷே கோஷ் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது. தாக்குதலுக்குள்ளான மாணவர் சங்க தலைவி மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டது இடதுசாரி மாணவர் அமைப்பிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.