சட்டவிரோதமாக கஞ்சா விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செய்துங்கநல்லூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் 2 பேர் மீது ஏற்கனவே நெல்லை சீவலப்பேரி காவல் நிலையத்தில் 5 கொலை முயற்சி வழக்குகளும், சுந்தர் மீது கொலை உள்பட 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.