Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜபுதூர்- கொடுமுடியாறு அணைக்கு செல்லும் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதனை பார்த்ததும் 2 வாலிபர்களையும் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் மகிழடி பகுதியில் வசிக்கும் ராஜா மற்றும் ஜெயக்குமார் என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் சட்டவிரோதமாக கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த 400 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |