தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தொடர் இரங்கல் தீர்மானத்தை அடுத்து 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய ஆளுநர் உரையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. குடியுரிமை திருத்தச்சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் சபாநாயகர் தனபால் தலைமையில் தமிழக சட்டப்பேரவின் 2ம் நாள் நிகழ்வு தொடங்கியது. இதில் மறைந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் தனபால் இரங்கல் குறிப்பு வாசித்தார். இதையடுத்து பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் 15 நிமிடங்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.