இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு அதன் கேப்டன் ரோகித் செய்தியாளர்களிடம் பேசியபோது பீல்டர்கள் தொடர்ந்து கேட்ச்களை தவற விடுவது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
இந்தியா இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 தொடரின் முதல் நாள் போட்டி லக்னோவில் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதில் இந்திய அணி கேப்டன் பொறுப்பில் ரோகித் சர்மா இருந்துள்ளார். இதனையடுத்து டாஸ்ஸை வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து போட்டிகளில் களமிறங்கிய இந்திய வீரர்கள் பந்துகளை விளாச தொடங்கியுள்ளார்கள். அதேபோல் இந்திய அணி இலங்கைக்கு எதிரான பந்துவீச்சிலும் மிக அருமையாக விளையாடி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளது.
இந்த வெற்றிக்குப் பிறகு ரோகித்சர்மா பத்திரிகையாளர்களிடம் பேசும்போது பீல்டர்கள் தொடர்ந்து கேட்ச்களை தவற விடுவது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அந்த தவறுகளை விரைவில் தாங்கள் திருத்திக் கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடரில் நாங்கள் சிறந்த பீல்டிங் அணியாக செல்வோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.