Categories
மாநில செய்திகள்

தமிழத்தில் நாளை (பிப்.27) ஒருநாள் மட்டுமே…. மக்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

பத்திர பதிவுகள், கல்வி சான்று பெறுதல், மத்திய, மாநில அரசுகளின் பெரும்பாலான சேவைகள் மற்றும் சமூகநல திட்ட பயன்களை பெறுதல் உள்ளிட்ட அனைத்திலும் ஆதார் எண் முக்கிய பங்காற்றுகிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு இ-சேவை மையங்களில் ஆதார் பதிவு மையம் செயல்பட்டு வருகிறது.

மேலும் தமிழகத்தில் ஆதார் பதிவு மையங்கள் 1,400-க்கும் மேற்பட்ட அஞ்சலகங்களில் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் அவ்வப்போது சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் நாளை (பிப்.27) வரை ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் கீழ்க்காணும் சேவைகளை பெற முடியும் :-

* முகவரி மாற்றம்
* புதியதாக ஆதார் எடுத்தல் ( கட்டணம் இல்லை )
* பெயர் மாற்றம்
* பிறந்த தேதி மாற்றம்
* அலைபேசி எண் இணைத்தல்
* புகைப்படம் மாற்றம் செய்தல்
* பயோமெட்ரிக் அப்டேட்
* மின்னஞ்சல் இணைத்தல்
* ஆதார் அட்டை காணாமல் போனால் அதனை மீண்டும் பெறுவதற்கு விண்ணப்பம்.

Categories

Tech |