Categories
உலக செய்திகள்

“தரை, வான், கடல்” என மும்முனையிலிருந்து தாக்கும் ரஷ்யா…. “சீன அதிபருடன்” ஆலோசனை நடத்திய புதின்…. முற்றுப்புள்ளி பெறுமா போர்….!!

உக்ரேனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் சீன அதிபர் ஜின்பிங்குடன் ரஷ்ய ஜனாதிபதி புதின் ஆலோசனை நடத்தியுள்ளார்.

உக்ரேனில் நேற்று 2 ஆவது நாளாக தொடர்ந்து ரஷ்யா தங்களது தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும் ரஷ்யா கடல் வழி, தரைவழி, வான் வழி என மூன்று பகுதிகளிலிருந்தும் உக்ரேன் மீதான தங்களது தாக்குதலை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி உக்ரேனின் பல பகுதிகளில் ரஷ்ய ஏவுகணை மழையையும் பொழிந்து வருகிறது.

அதே போல் உக்ரைன் அரசும் தங்களை தற்காத்துக்கொள்ள ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வாறு இருக்க உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் சீன அதிபர் ஜின்பிங்குடன் ரஷ்யாவின் ஜனாதிபதியான புதின் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த பதற்றமான போர் சூழ்நிலையில் இரு நாட்டு தலைவர்களின் ஆலோசனை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Categories

Tech |