வாட்ஸ்ஆப் தகவலை நம்பி பெண் ஒருவர் ரூ.2,63,820 பணத்தை இழந்துள்ளார். ராமநாதபுரத்தை சேர்ந்த ஜெயந்தி என்பவருக்கு வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்று வாட்ஸ்ஆப்பில் தகவல் வந்துள்ளது. தகவல் அனுப்பிய நண்பருக்கு போன் செய்து மேலும் விசாரிக்க, அந்த நபர் ஒரு லிங்க்-ஐ அனுப்பி பணம் செலுத்தினால் அத்தொகை இருமடங்காக கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
அதனை நம்பி ஜெயந்தி 2 லட்சத்து 63 ஆயிரத்து 820 ரூபாய் பணத்தை செலுத்தி ஏமாந்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.