மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
ஜெய்சுகின் என்பவர்தான் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதற்கு மூல மனுதாரராக இருந்தார்.அவர்தான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ச்சியாக சட்ட போராட்டங்களை நடத்தி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு மிக முக்கியமாக காரணமாக இருந்தார். இவர் தற்போது தமிழக மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்து இருக்கிறார். உச்சநீதிமன்றம், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பது இது தொடர்பான அறிவிப்பை டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால் மாநில தேர்தல் ஆணையம் கிராமப்புறங்களுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் அறிவிப்பை அறிவித்தது. நகர பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்துவதற்கு அறிவிப்பை வெளியிடவில்லை. எனவே இது நீதிமன்ற அவமதிப்பாக தான் கருதப்படுகின்றது. இதனால்மாநில தேர்தல் ஆணையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உடனடியாக நடைபெறாமல் இருக்க கூடிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளைய தினம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பாக கோரிக்கையாக வைக்கப்பட்டு உடனடியாக விசாரணை நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது.