Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: “இந்தியாவின் ஆதரவு” ரஷ்யாவிற்கா….? ஐ.நாவில் வாக்கெடுப்பு…. அமெரிக்காவின் உறவில் புதிய விரிசல்….!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் வாக்கெடுப்பில் இந்தியா உட்பட பல முக்கிய நாடுகள் பங்கேற்கவில்லை.

உக்ரேனின் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து 3 ஆவது நாளாக தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனையடுத்து ரஷ்யப் படைகளை அந்நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை தாக்கி அழித்துள்ளார்கள். இவர்களுக்கு உக்ரேன் ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஐ.நா சபையில் இன்று உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதற்கு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் நடந்த வாக்கெடுப்பில் 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துள்ளது.

ஆனால் இந்தியா, சீனா, ஐக்கிய அமீரகம் ஆகிய 3 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதையடுத்து ரஷ்யா தங்களது வீட்டா அதிகாரத்தை பயன்படுத்தி ஐ.நா சபையின் தீர்மானத்தை முறியடித்துள்ளது. இதற்கிடையே இந்தியாவிடம் ரஷ்யாவும், அமெரிக்காவும் தங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுள்ளார்கள். இவ்வாறு இருக்க இந்தியா ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் படி ஐ.நா சபையின் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதனால் அமெரிக்கா-இந்தியா உறவு விரிசலடையும் அபாயம் உருவாகியுள்ளது.

Categories

Tech |