நடிகர் ரஜினிகாந்தின் தலைவர்-169 திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் மக்களால் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்திருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யவில்லை. இதனால் ரஜினி தனது அடுத்தபடத்திற்கு மிகவும் கவனமாக கதை கேட்டு வந்தார். இதன் விளைவாக கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் கதை ரஜினிக்கு பிடித்துப்போனது. இதனால் தலைவர்-169 நெல்சன் திலீப்குமார் இயக்குகின்றார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. மேலும் அனிருத் இசையமைக்கின்றார்.
இத்திரைப்படத்தில் ரஜினி இளம் நடிகையுடன் நடிப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றார். இயக்குனர், ஹீரோயினாக யாரை தேர்வு செய்வது என்பதில் குழப்பமடைந்துள்ளார். ரஜினி ஐஸ்வர்யாராயை தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால் சன் பிக்சர்ஸ் ஐஸ்வர்யாராயை தேர்வு செய்தால் பட்ஜெட் அதிகமாகி விடும் என்பதால் தமிழ்நாட்டிலேயே பல பிரபலமான நடிகைகள் உள்ளார்கள். அவர்களை தேர்வு செய்யுங்கள் என கூறி வருகின்றனர். இருப்பினும் ரஜினி இளம் நடிகைகளுடன் நடிப்பதில் தொடர்ந்து தயக்கம் காட்டுகின்றார். இச்செய்தியை அறிந்த ரசிகர்கள் சீக்கிரம் ஒரு நல்ல முடிவை எடுங்கள் தலைவா.! என இணையத்தில் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.