Categories
உலக செய்திகள்

#JUSTIN: உக்ரைனில் 3-வது நாளாக நீடிக்கும் பதற்றம்…. கீவ்வில் இணைய சேவை பாதிப்பு…..!!!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் நடைபெற்று வரும் போரில் பிற நாட்டினர் யாரேனும் தலையிட்டால் அவர்கள் இதுவரையிலும் காணாத மோசமான அழிவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையில் ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் பதற்றம் 3-வது நாளாக நீடித்து வருகிறது. தற்போது ரஷ்ய படை வீரர்கள் உக்ரைனை 3 திசைகளிலும் சுற்றிவளைத்து தலைநகர் கீவ்வை ஆக்கிரமிக்க கடும் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் இணையதள சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கீவ்வை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய ராணுவ படை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனின் இணைய சேவையின் முதுகெலும்பாக உள்ள ஜிகாட்ரான்ஸ், பாதிப்பை சந்தித்துள்ளதாக சைபர் பாதிப்பு கண்காணிப்பு அமைப்பான நெட்ப்ளாக்ஸ்  தெரிவித்துள்ளது..

Categories

Tech |