மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மாணவிகள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆமணக்குநத்தம் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துச்செல்வி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் முத்துச்செல்வி தனது தோழிகளான அமுதா, திவ்ய பிரபா ஆகியோருடன் சேர்ந்து பள்ளி முடித்து விட்டு ஆமணக்குந்த்தம் கண்மாய் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் திடீரென முத்து செல்வியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்து 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்