Categories
உலக செய்திகள்

ஊழலை மறைக்க தான் புடின் படையெடுத்திருக்கிறார்…. கடுமையாக குற்றம் சாட்டும் அலெக்சி நவால்னி…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்திருப்பதை,  சிறையிலிருக்கும் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்சி நவால்னி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ரஷ்ய நாட்டில் கடந்த 1999-ஆம் வருடத்திலிருந்து பிரதமர் மற்றும் அதிபராக பதவி வகித்த விளாடிமிர் புடின், கடந்த 2019-ஆம் வருடத்தில் அதிபராக இருந்த போது, வரும் 2036 ஆம் வருடம் வரை, தான் அதிபராக இருக்கக் கூடிய வகையில் அரசியலமைப்பு திருத்தத்தை மாற்றியமைத்தார்.

அதிக வருடங்களாக பதவி வகித்து வந்த விளாடிமிர் புடின், தன் ஆட்சியில் அதிக ஊழலை செய்திருக்கிறார் என்று குற்றம் சாட்டிய, எதிர்க்கட்சித் தலைவரான அலெக்சி நவால்னி பல ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார். அதன்பிறகு, ரஷ்ய அரசு, அலெக்ஸி நவால்னியின் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.

அதனைத்தொடர்ந்து, ரஷ்ய காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அவர் தன் வழக்கறிஞர் மூலமாக ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது தொடர்பில் தன் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார். அவர், விளாடிமிர் புடின், தன் ஆட்சி காலத்தில் இருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக தான் உக்ரைன் மீது படையெடுத்திருக்கிறார் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

Categories

Tech |