சாலைப் பணியாளர்கள் மீது கார் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புளியபட்டி கிராமத்தில் சாலை பணியாளரான சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான கருப்பசாமி, கார்த்திகேயன், மோகன் குமார் ஆகியோருடன் சேர்ந்து விருதுநகர்- சாத்தூர் நான்கு வழிச்சாலையில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் திடீரென நிலைதடுமாறி சாலை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் இதுகுறித்து பதிவு செய்த காவல்துறையினர் காரை ஓட்டி வந்த வன்னியராஜன் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.