Categories
உலக செய்திகள்

நீங்கள் என்னை உயிரோடு பார்ப்பது இதுவே கடைசி முறை…!! உருக்கத்தில் உக்ரைன் அதிபர்…!!

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நீங்கள் என்னை உயிரோடு பார்ப்பது இதுவே கடைசி முறையாகும் என தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 2 வது நாளாக நடைபெற்று வருகிறது. வான்வழி, கடல் வழி,  தரை வழி  என மும்முனைத் தாக்குதல் நடைபெறுவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதே போல் உக்ரேன் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக ரஷ்யாவிற்கு  பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையில் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்குமாறு இராணுவத்தினருக்கு உக்ரைன் அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.

உக்ரைன் ராணுவ அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும். உக்ரைனில் தற்போது உள்ள ஆட்சியை அகற்றி விட்டு ராணுவ ஆட்சியை கொண்டுவர வேண்டும் என புதின் கோரியுள்ளார். இதற்கிடையில் ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி   காணொலிக் காட்சி மூலம் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் பேசிய ஜெலன்ஸ்கி “நீங்கள் என்னை உயிரோடு பார்ப்பது இதுவே கடைசி முறையாகும்” என கூறியிருக்கிறார்.

Categories

Tech |