Categories
உலக செய்திகள்

ரஷ்யா மீது இணையதள போர்…!! ஹேங்கிங் குழு அதிரடி அறிவிப்பு…!!

ரஷ்யா மீது இணையதள போரை தொடங்கியுள்ளதாக அடையாளம் தெரியாத ஹேங்கிங் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இரண்டாவது நாளாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதல்  நடத்தி வருகிறது. மும்முனைத் தாக்குதல் நடைபெறுவதால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதேபோல் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக உக்ரைன் ,ரஷ்யாவிற்கு  பதிலடி கொடுத்து வருகின்றனர். ரஷ்யாவின் தாக்குதலில்  முற்றிலுமாக நிலைகுலைந்து போயுள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவின் மீது இணைய போரைத் தொடங்கி உள்ளதாக அடையாளம் தெரியாத ஹேங்கிங் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய அரசுக்கு எதிரான  இந்த தாக்குதலில் முதற்கட்டமாக நாட்டின் அரசு ஊடகமான  ‘ஆர்டி’ தொலைக்காட்சி கம்ப்யூட்டர்களை  ஹேங்  செய்யும்  செயல்பாட்டில்  உள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது.

Categories

Tech |