Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் …. “பனி படர்ந்த நிலையில் வீரரின் உடல்”…. வைரல் போட்டோ….!!

உக்ரைன் வீரர்கள் நடத்திய தாக்குதலில் ரஷ்யா படையை சேர்ந்த 1000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா போர் தற்பொழுது உச்சமடைந்துள்ளது. மேலும் இந்தப் போரினை தவிர்க்க ஐ.நா அமைப்பு ரஷ்யாவிடம் வேண்டுகோள் வைத்தது. இதனை தொடர்ந்து விளாடிமிர் புதின் ரஷ்யா படைகளுக்கு உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனின் பல மூலைகளில் இருந்து தாக்க தொடங்கினர். ரஷ்யா நேற்று முன்தினம் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவுடனான போரில் முதல் நாளில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக கூறினார். மேலும் இரண்டாவது நாளாக போர் நீடித்தது. இந்தப் போரில் 6 ஹெலிகாப்டர்கள், 7 விமானங்கள்,  30க்கும் அதிகமான பீரங்கிகள் மற்றும் 800 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில் ரஷ்யா உக்ரைனின் 211 ராணுவ நிலைகளை அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று உக்ரைன் வீரர்கள் நடத்திய தாக்குதலில் ரஷ்யா படையை சேர்ந்த 1000 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியது “உக்ரேனின் 10 ராணுவ அதிகாரிகள் உட்பட 137 வீரர்களை ரஷ்ய படையினரால் இழந்துவிட்டோம்” என்று கூறினார். ஆனால் ரஷ்ய வீரர்களின் உயிரிழப்பு குறித்து அந்த நாட்டு ராணுவத்தினரிடம் இருந்து தகவல் எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில் ரஷ்ய  ராணுவ படையை சேர்ந்த பல ராக்கெட்டுகளை ஒரே சமயத்தில் ஏவும் திறன் கொண்ட வாகனம் ஒன்று உக்ரேனின் கார்கிவ் நகருக்கு வெளியே உள்ளது. மேலும் அதன் பக்கத்தில் வீரர் ஒருவரின் உடல் ஆடை முழுவதும் பனி படர்ந்த படி  கீழே விழுந்து கிடப்பது போன்ற போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது.

Categories

Tech |