Categories
உலக செய்திகள்

“நாங்க இங்க தான் இருப்போம்”…. ஊடகங்களுக்கு சரியான பதிலடி… விடியோ வெளியிட்ட உக்ரைன் அதிபர்…!!!

உக்ரைன் ஊடகங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

உக்ரைன் மீது மூன்றாவது நாளாக ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகின்றது. மேலும் வான்வழி, கடல் வழி மற்றும் தரை வழி என மூன்று முனை தாக்குதலை நடத்தி வருகின்றது. இதனால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது உக்ரைன் நாட்டில் ஏராளமான இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கிய அழித்துவிட்டன. இதனைத் தொடர்ந்து உக்ரைன் தங்களை காத்துக் கொள்வதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

மேலும் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைனின் தலைநகர் கீவையும் ரஷ்ய படைகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தப்பி சென்றுவிட்டதாக ரஷ்ய ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டு வந்தன. மேலும் ஜெலன்ஸ்கி  வெளிநாட்டில் இருந்தபடியே பேசி வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இதற்கு ஜெலன்ஸ்கி தானும் தனது அமைச்சரவை உறுப்பினர்களும் தலைநகர் கீவில்தான் உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து உக்ரைன் நாடாளுமன்றத்திற்கு அருகே நின்றபடி ஜெலன்ஸ்கி வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். தற்போது “நாங்கள் அனைவரும் கீவ் நகரில் தான் இருக்கிறோம். எங்களது  ராணுவமும் இங்குதான் உள்ளது. பொதுமக்கள் இங்கு உள்ளனர். எங்களின் சுதந்திரம், எங்கள்  நாட்டை பாதுகாக்க நாங்கள் இங்கு இருக்கிறோம். நாங்கள்  இங்கு தொடர்ந்து இருப்போம்” என்றார்.

Categories

Tech |