சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படத்தின் கதை இணையத்தில் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் டான். இத்திரைப்படமானது மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிப்பு வந்திருந்த நிலையில் தற்போது இப்படம் மே மாதத்தில் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயனுக்கு அண்மையில் வெளியான படங்கள் பெரிதாக ரசிகர்களை ஈர்க்காத நிலையில், டாக்டர் படம் அவருக்கு கைகொடுத்தது. இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் வாயிலாக தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகின்றார். இத்திரைப்படத்தை இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குகின்றார். இப்படத்தில் அனிருத் இசையமைக்கின்றார். மேலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கின்றார்.
இந்நிலையில் இத்திரைப்படத்தைப் பற்றி இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகின்றது. அது என்னவென்றால் இத்திரைப்படத்தில் கதாநாயகன் கல்லூரி படிப்பு படித்து கொண்டிருக்கும்பொழுது இயக்குனராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதனால் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு இயக்குனராவதற்குக்கான பணிகளைச் செய்கிறார். இவர் இயக்குனர் ஆனாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ். இது சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகின்றது. இக்கதை போலவே தமிழில் விண்ணை தாண்டி வருவாயா உள்ளிட்ட சில திரைப்படங்கள் வந்திருக்கின்றன என கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் இத்திரைப்படம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என ரசிகர்கள் கூறுகின்றனர். இப்படம் வெளியானால் இத்தகவலில் எவ்வளவு உண்மைதன்மை இருக்கின்றது என்பது தெரிய போகின்றது.