Categories
உலக செய்திகள்

“போருக்கு நடுவே திருமணம்”…. உக்ரைனை சேர்ந்த இளம் ஜோடியின் அதிரடி முடிவு….!!!

உக்ரைனை சேர்ந்த இளம் ஜோடி போருக்கு நடுவே வான்வழி தாக்குதலுக்கு மத்தியில், வெடிகுண்டுகளின் சத்தத்திற்கு இடையே ஒரு ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

உக்ரைனை சேர்ந்த இளம் ஜோடி வருகின்ற மே மாதம் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தனர். இந்த இளம் ஜோடியான ஸ்வயடோஸ்லாவ் பர்சின், யரினா எரிவா இவர்கள் உக்ரேனின் தலைநகரான தீவில் உள்ள ஒரு உணவகத்தின் மேல்தளத்தில் டினிப்பர்  ஆற்றை பார்த்தவாறு திருமணம் செய்ய இருந்துள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களாகவே உக்ரைனில் போர் பதற்றம் நிலவி வருவதால் ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீதான தாக்குதலை அறிவித்துள்ளார். இதனால் ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கியது.  இந்நிலையில் அமைதியான நதி, அழகான விளக்குகள், உணவகத்தின் மேல்தளம் என்று அமைதியான முறையில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

தற்போது  பர்சின், யரினா  தம்பதி போருக்கு நடுவே, வான்வழி தாக்குதலுக்கு மத்தியில் வெடிகுண்டுகளின் சத்தத்திற்கு இடையே ஒரு ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.இவர்கள் இருவரும் நாட்டை பாதுகாக்கும் முயற்சியில் சேர உள்ளூர் பிராந்திய பாதுகாப்பு மையத்திற்கு செல்ல தயாராகியுள்ளனர்.இதனால் தான் அவசரமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து யரினா “நிச்சயம் ஒருநாள் தாக்குதலின் பயத்தில் இருந்து விடுபட்டு எங்கள் திருமணத்தை கொண்டாட முடியும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |