Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில்களில் இனி…. புதிய நடைமுறை அமல்…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் முக்கியமான கோவில்களில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடா்ந்து கண்காணிக்கும் வசதி அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில் மேலாண்மை திட்டம் செயலாக்கத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தி உள்ள முக்கியமான கோவில்களின் அன்றாட நிகழ்வுகளை கண்காணித்திட ஆணையா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் கருவறைக்கு வெளியே உள்ள இடம், பக்தா்கள் அதிகளவில் கூடும் இடம், தரிசனத்திற்குச் செல்லும் வழி, அன்னதான கூடம், சமையலறை, பக்தா்கள் உணவு அருந்தும் இடம், முடிகாணிக்கை செய்யும் இடம், நந்தவனம், யானை பராமரிப்பு இடம், கோசாலை, தெப்பக்குளம், சிலைகள் பாதுகாப்பு அறை, கோவிலின் சுற்று பிரகாரம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்கள் நேரடியாகக் கண்காணிக்கப்படும். இத்திட்டத்தின் வாயிலாக முக்கியமான 48 கோவில்களில் கண்காணிக்கப்படும்.

குறிப்பாக அதிகளவு பக்தா்கள் கூட்டம் வருகை தரும் கோவில்கள், மாதந்தோறும் சிறப்பு திருவிழாக்கள் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகள் தீவிர கண்காணிப்பு செய்யப்படும். இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக திருக்கோவில்களுக்கு உள்ளே நடைபெறும் உள்வியாபாரம் தடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மற்றும் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் முடிந்து வெளியேறும் வழியாக கோவிலுக்குள் செல்பவா்கள் தடுக்கப்பட்டுள்ளனா்.

இதன் மூலமாக பக்தா்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய ஏதுவாக இருக்கும். இதனிடையில் பக்தா்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்படுகின்றனா். இத்திட்டம் வாயிலாக வெளிப்படைத் தன்மையுடன் கோவில்களில் நடைபெறுவதை உடனுக்குடன் கண்காணிப்பதுடன், குறைகளையும் உடனே களைய முடியும். ஆகவே இனிவரும் காலங்களில் மீதமுள்ள கோவில்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு குறைகள் களைய நடவடிக்கை எடுக்கப்படும்.

Categories

Tech |