தமிழகத்தில் இன்று (பிப்ரவரி 26) தென் தமிழகம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மிதமான மழைக்கும், மார்ச் 2ஆம் தேதி திருச்சி, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பிப்ரவரி 27, 28-ல் தென் கிழக்கு வங்கக் கடல், தெற்கு அந்தமான் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Categories