Categories
சினிமா தமிழ் சினிமா

“அவர் பயந்தாகோலி”…. பிரபல நடிகரை கேலி செய்த அனன்யா பாண்டே…. வச்சு செய்யும் ரசிகர்கள்….!!

பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவை கேலி செய்த நடிகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரசிகர்கள். 

திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனன்யா பாண்டே. இவர் தற்போது  இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக படம் நடித்து வருகிறார். அனன்யா பாண்டே சமீபத்தில் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகரான விஜய் தேவர்கொண்டாவை பயந்தாங்கோலி என்று விமர்சித்துள்ளார். இது ரசிகர்களிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அனன்யா பாண்டே தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் “விஜய் தேவரகொண்டா திரைப்படங்களில் முரடான ஆளாகவும், தைரியசாலியாகவும் நடித்து வருகிறார். ஆனால் அவர் நிஜத்தில் பயந்தாங்கோலி யாருடனும் அவ்வளவாக பேச மாட்டார். மேலும் அவர் தனது வேலையை முடித்துக் கொண்டு அமைதியாக இருப்பார். இதனை தொடர்ந்து நடிப்பில் எனக்கு விஜய் தேவர்கொண்டாவுடன் நிறைய ஒத்துழைப்பு இருந்தது. ஆனாலும், திரையுலகில் காட்டுகின்ற தைரியம் அவருக்கு நிஜவாழ்வில் கிடையாது” என்று கூறியுள்ளார். அனன்யா பாண்டி அளித்த இந்த பேட்டியில்  பயந்தாங்கோலி என்று கேலி செய்து விஜய் தேவரகொண்டாவை அவமதித்து விட்டதாக அவரின் ரசிகர்கள் அவரை இணையதளங்களில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |