Categories
சினிமா தமிழ் சினிமா

“இப்படி பிரித்து பேசாதீங்க”…. வருத்தத்தில் பிரபல நடிகை…. என்ன ஆச்சு?…. நீங்களே பாருங்க…!!!

பிரபல நடிகை ரெஜினா காசன்ட்ரா தென்னிந்திய நடிகர்களை பிரித்து பேசுவதாக குற்றம் சாட்டி வருகிறார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரெஜினா காசன்ட்ரா. இவர் அழகிய அசுரா, கண்ட நாள் முதல், மாநகரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். ரெஜினா காசன்ட்ரா தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் இவர் வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தென்னிந்திய நடிகர்களை, ஹிந்தி திரையுலகினர் பிரித்து பேசுவதாக குற்றம் சாட்டி வருகிறார்.

இதுதொடர்பாக ரெஜினா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் “தமிழ் மற்றும் தெலுங்கில் உள்ள நடிகர், நடிகைகளை ஹிந்தி திரை உலகம் தென்னிந்திய நடிகர்கள் என்று அழைக்கும் நிலைமை உள்ளது. மேலும் இப்படி நடிகர்களை பிரித்து பார்ப்பது மற்றும் அங்குள்ள பலரும் தென்னிந்திய நடிகர்கள் என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருப்பது எனக்கு வருத்தமாக உள்ளது. மேலும் எனக்கு அவர்களை இப்படி பேசாதீர்கள் என்று கண்டிக்கவும் தோன்றுகிறது. தென்னிந்திய நடிகர்கள் என்று சொல்லாமல் நடிகர், நடிகைகள் என்று அவர்களை அழைக்க வேண்டும். தென்னிந்திய நடிகர்கள் என்று அழைக்கப்படுவர்களின் படங்கள் தற்போது இவர்களால் அனைத்து மொழிகளிலும் வெளியாகி வருகிறது. அதனால் அடுத்த சில ஆண்டுகளில் தென்னிந்திய நடிகர்கள், ஹிந்தி நடிகர்கள் என்று பிரித்துப் பார்க்கும் நிலைமை இருக்காது என்று நினைக்கிறேன்” இவ்வாறு  கூறியுள்ளார்

Categories

Tech |