Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க பேசினது தப்பு தான்…. நீங்களும் அப்படியே பேசுறீங்க…. முக.ஸ்டாலின் சமரசம் …!!

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் பேட்சால் சட்டசபையில் திமுக – அதிமுக உறுப்பினர்களிடையே அமளி ஏற்பட்டது.

2_ஆவது நாளாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சபாநாயகரின் பேச்சை கேட்காமல் பேசிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பேசினார். அப்போது அமைச்சர் உட்கார வேண்டும் என்று ஜெ அன்பழகன் பேசியதற்கு அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

இப்படி பேசக்கூடாது என்று சட்டப் பேரவைத் தலைவர் சபாநாயகர் பேரவையில் அதற்கான விளக்கம் அளித்திருந்தார்.அன்பழகன் உள்ளாட்சித் துறை அமைச்சரை ”உட்கார்” என்று ஒருமையில் பேசியதாக சபாநாயகர் புகார் அளித்தார். இதற்க்கு ஆளும் கட்சி உறுப்பினர்களும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்த சம்பவம் காரணமாக பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித்தலைவர் முக.ஸ்டாலின் பேசும் போது , ஜெ அன்பழகன் இப்படி பேசியது தவறு என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.ஆனால்  உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணியும் அதேபோன்ற தொனியில் தான் பேரவையில் பேசினார்கள் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.இதனால் பேரவையில் அமளி ஏற்பட்டது .

Categories

Tech |