Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே!…. தமிழகத்தில் நாளை 60 லட்சம் குழந்தைகளுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!

போலியோவை ஒழிக்க வருடந்தோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்தியாவில் 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா கருதபடுகிறது. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக, வருடத்துக்கு ஒரு முறை போலியோ சொட்டு மருந்தானது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்துக்கான போலியோ சொட்டு மருந்து முகாமானது தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பிப்.27 (நாளை) காலை 7- மாலை 5 மணி வரையிலும் நடைபெற இருக்கிறது. இது குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் வெளியிட்ட விழிப்புணா்வு விடியோ பதிவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் கடந்த 1995 முதல் தொடா்ந்து 27 வருடங்களாக இந்த முகாம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையிலும் கடந்த 17 வருடங்களாக போலியோ பாதிப்பு இல்லை. நமது மாநிலத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 60 லட்சம் குழந்தைகள் இருக்கின்றனர். இவா்கள் அனைவருக்கும் போலியோ தடுப்பு மருந்தை வழங்கும் நோக்கத்தில் 43,000 இடங்களில் முகாம்கள் அமைக்கப்படும். அதாவது மருத்துவமனைகள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் சோதனைச்சாவடிகளிலும் இந்த சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக நடமாடும் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று அவா் கூறினார்.

Categories

Tech |