Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்க வேண்டும்…. ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சார்பில் நடைபெற்ற…. சிவகங்கையில் பரபரப்பு….!!

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப கூடுதல் ஆசிரியர்களை  ஒதுக்கி பொது மாறுதல் கலந்தாய்ன் மூலம்  ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். மேலும்  நியமன கோரிக்கைக்காக போராடிய ஆசிரியரே அவதூறாக பேசி கைது செய்ய  தூண்டிய தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரையும்  கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

இதில் மாவட்டத் தலைவர் தாமஸ், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சி தம்பி, மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டி, மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ், மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, கல்வி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், சிங்கராயர், கல்வி மாவட்ட தலைவர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |