பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த ராதிகா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த ராதிகாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராதிகா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.