இலங்கை கடற்ப்படையினர் கைது செய்த 12 தமிழக மீனவர்களை வருகின்ற 28ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 12ஆம் தேதி சுமார் 12 மீனவர்கள் 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து யாழ்பாணம் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து அவர்களை நேற்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
அப்போது வலக்கை விசாரித்த நீதிபதி கைது செய்யப்பட்ட மீனவர்கள் 12 பேரையும் வருகின்ற 28ஆம் தேதி வரை சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இதனைதொடர்ந்து மீனவர்களை மீண்டும் யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.