இளைஞர் ஒருவர் வானில் ஹெலிகாப்டரில் தொங்கியபடி சாதனை புரிந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
ஆர்மேனிய நாட்டை சேர்ந்தவர் Roman Sahradan என்ற இளைஞர் ஒருவர் வானில் பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரில் தொங்கியவாறு தொடர்ந்து 23 தடவை புல்லப் அப் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
மேலும் கின்னஸ் புத்தகத்தின் அதிகாரபூர்வ இணையபக்கத்தில் இவரது இந்த சாதனையானது வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு மன உறுதியுடன் சாதனை படைத்துள்ள அந்த இளைஞரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.