மாணவியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டையில் சுப்புகுட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட தொழிலாளியான முகேஷ் என்ற மகன் இருக்கிறார். இவர் மற்றொரு தொழிலாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது தொழிலாளியின் தங்கையான 16 வயது சிறுமிக்கும், முகேஷுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் முகேஷ் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்பின் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவர் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர் நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முகேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.