இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு கௌசல்யா மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கௌசல்யாவுக்கு பிறந்த பெண் குழந்தை இரண்டு வாரத்தில் இறந்துவிட்டது. மேலும் கௌசல்யா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கௌசல்யா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கௌசல்யாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கௌசல்யா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.