Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL: (இன்று) 2 ஆவது நாள் போட்டி…. “மழை பொழிய வாய்ப்பு”…. வானிலை மையம் தகவல்….!!

குளிர்ச்சி பகுதியான தர்மசாலாவில் இன்று நடைபெறும் இலங்கை இந்திய அணிகளின் டி20 தொடருக்கான 2 ஆவது நாள் போட்டியில் மழை குறுக்கிடுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா இலங்கை அணிகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கடந்த 24ஆம் தேதி துவங்கியுள்ளது. இந்த டி20 தொடருக்கான முதல் போட்டி லக்னோவில் வைத்து நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இஷான் கிஷன் 80 ரன்களை குவித்து ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார்.

இதனையடுத்து டி20 தொடருக்கான 2 ஆவது நாள் போட்டி குளிர்ச்சி பகுதியான தர்மசாலாவில் வைத்து இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தின் போது மழை குறுக்கிடுவதற்கு அதிகளவு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |