Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதி இல்லை…. கட்சியினர் போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

அடிப்படை வசதியில்லாத சுங்க சாவடியில் கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேலம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கவாடி அமைக்கப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுங்கவாடி ஊழியர்கள் அவ்வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி கட்டணம் வசூல் செய்துள்ளனர். அப்போது அடிப்படை வசதி இல்லாமல் சுங்கவாடி திறக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது பற்றி தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தாசில்தார் அங்கு சென்று அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாமல் கட்டணம் வசூல் செய்யப்படுவது  தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் அடிப்படை வசதி இல்லாத வகையில் கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |