Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பேருந்தில் வந்து கொண்டிருந்த மாணவன்…. வாலிபர்களின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை….!!

கல்லூரி மாணவனை தாக்கிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்னம்பட்டி கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திதாசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சக்திதாசன் கடந்த 24 – ஆம் தேதி கல்லூரி முடித்துவிட்டு செய்யாறில் இருந்து அரசு பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அபிஷேக், யுவராஜா ஆகிய இருவர் முன்விரோதம் காரணமாக பேருந்தில் ஏறி சக்திதாசனை  சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சக்திதாசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |