பிரான்ஸிலுள்ள உலகப் புகழ் வாய்ந்த ஈபிள் கோபுரத்தில் உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு கொடியின் நிறங்களில் வண்ண விளக்குகள் ஒளிர்ந்துள்ளது.
உக்ரேனில் ரஷ்யா தொடர்ந்து 3 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. மேலும் உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. அதுமட்டுமின்றி ரஷ்யா தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்தும் உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிரான்ஸிலுள்ள உலகப் புகழ் வாய்ந்த ஈபிள் கோபுரத்தில் உக்ரேன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு கொடியின் நிறங்களில் வண்ண விளக்குகள் ஒளிர்ந்துள்ளது. அதாவது ஈபிள் கோபுரம் நீளம் மற்றும் மஞ்சள் நிறங்களில் ஒளிர்ந்துள்ளது.