அமெரிக்கா ஒத்துழைப்பு தர மறுப்பதால் 500 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி மையம் இந்தியா மற்றும் சீனா மீது விழும் என்று ரஷ்ய விண்வெளி துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் மூன்றாவது நாளாக நடந்து வருகிறது. மேலும் ரஷ்யா மீது அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யாவிற்கு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ரஷ்ய விண்வெளி துறையை சார்ந்த நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சர்வதேச விண்வெளி மையத்தின் செயல்பாடுகளில் அமெரிக்க ரஷ்ய முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் சர்வதேச விண்வெளி மையத்தில் அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்கா ஒத்துழைப்பு தர மறுப்பதால் 500 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி மையம் இந்தியா மற்றும் சீனா மீது விழும் என்று ரஷ்ய விண்வெளி துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் .