வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாங்கூர் வரதராஜபுரம் பஜனை கோவில் தெருவில் யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் யுவராஜ் பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார்.
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே யுவராஜ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.